35 வயதில் நடிகை சுனைனாவுக்கு திருமணம்.. காதலர் கைப்பிடித்து வெளியிட்ட போட்டோ

Sunaina
By Parthiban.A Jun 05, 2024 11:12 AM GMT
Report

நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகம் ஆனவர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை போன்ற பல படங்களில் நடித்தார்.

அதன் பின் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன ரோல்கள், கெஸ்ட் ரோல்கள் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார். மேலும் சமீபத்திய வருடங்களாக ரெஜினா ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

35 வயதில் நடிகை சுனைனாவுக்கு திருமணம்.. காதலர் கைப்பிடித்து வெளியிட்ட போட்டோ | Actress Sunaina Announces Marriage

திருமணம்

நடிகை சுனைனாவுக்கு தற்போது 35 வயதாகிறது. அவருக்கு திருமணம் எப்போது என தொடர்ந்து பேட்டிகளில் கேள்விகள் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சுனைனா தனது காதலர் கையை பிடித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு திருமணத்தை அறிவித்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.