அம்மா, அக்கா இல்லையா.. நடிகைகளின் அந்தரங்க வீடியோ குறித்து வெளுத்து வாங்கிய நடிகை
அதிதி பாலன்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து வருபவர் அதிதி பாலன். சமீபத்தில், இவர் 'சரிபோதா சனி வாரம்' என்ற படத்தில் நானியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
'அருவி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான இவர் சமீபத்தில், ஒரு யூடியூப் சேனலுக்கு நடிகைகளை ஆபாசமாக பார்ப்பதை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதிதி பாலன் பேட்டி
அதில், " நடிகைகள் என்றால் தவறாக தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நடிகைகள் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக் போட்டு விட்டு அதற்கு கீழ் ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தெரிந்து கொள்வதில் இந்த காலத்து ஆண்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு அம்மா, அக்கா, தங்கை என யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.
ஒரு நடிகையின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
தற்போது, நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகை அதிதி பாலன் பேசியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.