கமல்ஹாசன் போல் இருக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி செய்த அட்டகாசமான செயல்

Kamal Haasan Vijay Sethupathi Tamil TV Shows Bigg Boss Tamil 8
By Bhavya Oct 17, 2024 08:30 AM GMT
Bhavya

Bhavya

Report

பிக் பாஸ் 

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் சில காரணங்களால் விலகி, தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

கமல்ஹாசன் போல் இருக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி செய்த அட்டகாசமான செயல் | Vijay Sethupathi Wont Support Some Sponsors

மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில் பல ட்விஸ்ட் வைக்கப்பட்டு கடந்த வாரம் ரவீந்தர் மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று வீட்டிலிருந்து வெளியேறினார்.

கமல்ஹாசன் போல் இருக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி செய்த அட்டகாசமான செயல் | Vijay Sethupathi Wont Support Some Sponsors

கமல்ஹாசன் போன்று எவ்வாறு விஜய் சேதுபதி இந்த சீசன் தொகுத்து வழங்குவர் என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் இருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மிகவும் சிறப்பாக அவரது பணியை செய்து வருகிறார்.

விஜய் சேதுபதி செயல்

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியின் ஸ்பான்சர்ஸ் கம்பெனிகளில் மெயின் ஸ்பான்சர்ஸை மட்டும் தான் நிகழ்ச்சியின் போது சொல்வேன் என்றும் மற்றவற்றை சொல்ல மாட்டேன் என்றும் அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் காரணம், ஸ்பான்சர்ஸ்களில் ரம்மி சர்க்கிலும் இருப்பதால், அது மற்றவர்களை தவறான பாதையில் கொண்டு செல்லும் என்ற காரணத்தினால் தான் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.

ஆனால், கடந்த சீசன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த ரம்மி ஸ்பான்சர்ஸை கூறியது குறிப்பிடத்தக்கது. 

கமல்ஹாசன் போல் இருக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி செய்த அட்டகாசமான செயல் | Vijay Sethupathi Wont Support Some Sponsors