பேசுற பேச்சை பாத்தா தலைவி ஆயிடுவாங்களோ! நடிகை விந்தியா போட்ட பகீர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக கட்சியை வழி நடத்தி ஒருங்கிணைத்து வருபவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ். இக்கட்சியில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது என்றால் அது சசிகலாவால் தான்.
இரு குழுக்களாக அதிமுக கட்சி மாறியுள்ளது என்று ஒருசிலர் சசிகலா கட்சிக்கு வந்தால் நல்லது என்று கூறி ஆதரவாக பேசி வருகிறார்கள். அவர்களை பதம்பார்த்து கட்சி பொறுப்பில், உள்ளவர்கள் நீக்கி வருகிறார்கள். இதற்கு அக்கட்சியின் உறுப்பினராக இருக்கும் நடிகை விந்தியா ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கும் ஒருசில உள்கட்சியினரை மறைமுகமாக சாடி பேசியுள்ளார் விந்தியா. அதில், சில எலிகள் புலிகள் போல் வேஷமிட்டு எகத்தாலம் செய்கின்றது.
அதிமுக புறம்போக்கு நிலமல்ல இது புரட்சிதலைவர் புரட்சிதலைவி உயிரை தியாகம் செய்த சொத்து என்றும் எங்கள் கட்சி எங்கள் உரிமை எங்கள் குடும்பம் என்றும் பதிவிட்டுள்ளார். இதனை சிலர் கலாய்த்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
சில எலிகள்
— Vindhyaa (@vindhyaAiadmk) December 6, 2021
புலிகள் வேஷமிட்டு எகத்தாளம் செய்கின்றது
மிரட்டி கைப்பற்ற அதிமுக புறம்போக்கு நிலமல்ல இது புரட்சித்தலைவர் உருவாக்கிய புரட்சிதலைவி தன் உயிரை உரமாக்கிய சொத்து இது எங்கள் கட்சி எங்கள் உரிமை எங்கள் குடும்பம்
எங்களுக்கு இலையுதிர்காலமே கிடையாது எப்போதும் வசந்தகாலம் தான் pic.twitter.com/p3aUOnmw4A