ராசியில்லா நடிகையானதால் இப்படியொரு நிலை!! தொழிலை மாற்றிய நடிகை
கோலிவுட் வட்டாரத்தில் அறிமுகமாகிய குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு டாப் இடத்திற்கு வந்தவர் தான் அந்த நடிகை. ஆனால் நடித்து பல படங்கள் தோல்வி அடைந்த போதிலும் எப்படியாவது முன்னணி நடிகர்களுக்கு தூண்டில் போட்டு நடித்தும் வருகிறார்.
இதனால் அந்த நடிகை வேறு வழியில்லாமல் தன் தொழிலையே மாற்றியமைத்திருக்கிறாராம். தமிழில் போதிய வாய்ப்பு இல்லை என்று தெலுங்கு பக்கம் சென்று சத்தமே இல்லாமல் இந்த வேலையை ஆரம்பித்து இருக்கிறார் அம்மணி.

தற்போது தெலுங்கு பக்கம் முன்னணி தமிழ் நடிகர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அங்குள்ள ரசிகர்களை ஈர்க்க தெலுங்கு இயக்குனர்களை பிடிக்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு ஹீரோ பிளாப்பும் இன்னொரு டாப் ஹீரோ பிளாக்பஸ்டரும் கொடுத்திருந்தார்.
இப்படி தெலுங்கு இயக்குனர் பக்கம் அந்த ஹீரோக்கள் செல்ல அந்த நடிகை தான் பின்புலமாக இருக்கிறாராம். அப்படி அந்த நடிகர்களை தெலுங்கு இயக்குனர், தயாரிப்பாளர்களை அணுக இந்த அம்மணி தான் பாலமாக அமைத்து கொடுக்கிறாராம்.
இது மீடியாவில் கசிய துவங்கியதை கேட்ட நடிகையின் அம்மா, அவருக்கு திருமணத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்து வருகிறாராம். ஏற்கனவே தோல்வி படங்களாலும் மாஸ் ஹீரோவின் செட்டப் என்ற விமர்சனங்களும் பெரிய விசயமாக பேசப்பட்டதால் நடிகையின் அம்மா பெரிய குழப்பத்தில் இருக்கிறாராம். ஆனால் அம்மணி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்து வருகிறாராம்.