காதலித்தவரை கழட்டிவிட்டு வேறொருவரை மணந்த நடிகைகள்!! லிஸ்ட்டில் டாப் இடத்தில் சினேகா தான்..
சினிமாவில் இருக்கும் நடிகைகள் ஆரம்பத்தில் வாய்ப்பிற்காகவோ அல்லது அட்ராக்ஷனுக்காகவோ ஒருசிலரை காதலித்து வருவார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக உயிருக்கு உயிராய் காதலித்தவர்களை கழட்டி விட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்து செட்டிலாகிவிடுவார்கள். அப்படி காதலித்தவர்களை கழட்டிவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்த டாப் தென்னிந்திய நடிகைகள் யார் என்று பார்ப்போம்..
சினேகா
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசியாக இருக்கும் நடிகை சினேகா தான் இந்த விசயத்தில் டாப் இடத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் ஸ்ரீகாந்த், ஷாம், மாதவன் போன்ற நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கினாலும் முதல் பட இயக்குனருடன் திருமணம் செய்யும் அளவிற்கு காதலித்து வந்துள்ளார். ஆனால் சினேகா அதனை கடந்து பிரசன்னாவை காதலிக்க ஆரம்பித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபரின் சவகாசம் கிடைத்து அவருடன் நெருக்கமாக இருந்ததால் தான் சினேகா, சினிமா வாய்ப்பையே பெற்றார் என்றும் கூறப்பட்டது.
சிம்ரன்
90ஸ் கிட்ஸ்களின் டாப் ஹீரோயினாக தன் கவர்ச்சியால் கொள்ளையடித்த நடிகை சிம்ரன், உலகநாயகன் கமல் ஹாசனுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார். இந்த சம்பவம் பெரிய பிரலயத்தை ஏற்படுத்தியதால் அவரை கழட்டிவிட்டு மாஸ்டர் ராஜு சுந்தர் பக்கம் சாய்ந்தார். அதன்பின் அவரையும் கழட்டிவிட்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
நமீதா
கவர்ச்சி புயலாக ரசிகர்களை கவர்ந்த நடிகை நமீதா, தன்னுடன் நடித்த பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதனாலே சில வாய்ப்புகளையும் இழந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அதன்பின் வீரேந்திரா செளத்திரி என்ற நீண்டநாள் நண்பரை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றெடுத்து வாழ்ந்து வருகிறார்.
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நயன் தாரா ஆரம்பத்தில் சிம்புவுடன் காதலில் இருந்து அதன்பின் அவர் சைக்கோ என்ற காரணத்தை கூறி கழட்டிவிட்டார். அதன்பின் திருமணமாகி குழந்தை இருக்கும் மாஸ்டர் பிரபுதேவாவை உயிருக்கு உயிராய் காதலித்ததோடு அவரது பெயரை டேட்டூவாகவும் போட்டுக்கொண்டார். அவரது மனைவி கொடுத்த டார்ச்சரால் அவரைவிட்டும் சினிமாவை விட்டும் விலகினார். அதன்பின் அவருக்கு ஆதரவாக இருந்து வந்த விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றார்.
குஷ்பூ
80,90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பூ, ஆரம்பத்தில் நடிகர் பிரபுவை காதலித்து வந்தார். அப்படியொரு நெருக்கமாக இருந்த இருவரையும் கண்டித்து சிவாஜி கணேசன், வேறொரு பெண்ணை பார்த்து பிரபுவுக்கு திருமணம் செய்து வைத்தார். அதன்பின் குஷ்பூ சுந்தர் சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.