அக்காவின் இரண்டாம் திருமணம்!! பாலிவுட் நடிகருடன் குத்தாட்டம் போட்ட சங்கர் மகள் அதிதி..
தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராகவும் பிரம்மாண்ட இயக்குனராகவும் திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் ஜேன்சர் படங்களை பிஸியாக இருக்கி வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய இரு மகளின் வாழ்க்கை பற்றியும் யோசித்து சில விசயங்களை செய்து வருகிறார்.
ஐஸ்வர்யாவுக்கும், தருண் கார்த்திகேயனுக்கும் சில வாரங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.
ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னையில் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் - தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணத்திற்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிந்தார். மேலும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில் அக்காவின் இரண்டாம் திருமணத்திற்கு வந்திருந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் நடிகை அதிதி சங்கர் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர்களுடன் இயக்குனர் அட்லீயும் ஆட்டம் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
#RanveerSingh & #Atlee's குத்து at Shankar Daughter's Reception?❤️#Shankar #AditiShankar #Cineulagam pic.twitter.com/2E0OHKW7YD
— Cineulagam (@cineulagam) April 16, 2024