சூர்யாவுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் அதிதி!! சங்கர் மகளுக்கு ரூட்டை போட்டு தட்டித்தூக்கிய இயக்குனர்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பிரம்மாண்ட முறையில் உருவாகும் இப்படத்திற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.
இப்படத்தினை தொடர்ந்து சூர்யா இயக்குனர் சுதா கொங்கராவுடன் இணையவிருக்கிறார். புறநானூறு என்று டைட்டில் வைக்கப்பட்ட சூர்யாவின் S43 படத்தில் நடிகை நஸ்ரியா நஸிம், துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் படத்தின் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விருமன், மாவீரன் படத்திற்கு பின் ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அதிதி கமிட்டாகி இருக்கிறார். நடிகர் கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவுடன் ரொமான்ஸ் செய்யவிருப்பது சூர்யா ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.