வரிசைக்கட்டும் தயாரிப்பாளர்கள்!! விஜய் பட நடிகருக்கு ஜோடியான ஷங்கர் மகள் அதிதி..
இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்தார்.
அப்படத்தினை தொடர்ந்து மறைந்த நடிகர் முரளியின் இரண்டாம் மகன் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்தில் கதாந்நாயகியாக நடிக்கவுள்ளார். இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகவுள்ள அதிதி ஷங்கர், முரளியின் மூத்த மகன் அதர்வா நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியது.
இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கும் இப்படத்தினை ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்க சாம் சிஎஸ் இசையக்கவுள்ளார். இந்நிலையில், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மில்லியன் டாலர் தயாரிக்கும் இப்படத்திற்கு புரொடக்ஷன் நம்பர் 4 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.