விஜே சித்ரா தற்கொலை வழக்கில் சிக்கும் முன்னாள் அமைச்சர்

V. J. Chitra
By Parthiban.A May 02, 2022 09:11 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விஜே சித்ரா 2020 டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பின் ஜாமினில் வெளியில் வந்த அவர் தற்போது போலீசில் ஒரு புகார் அளித்து இருந்தார். சித்ரா தற்கொலையில் அரசியல் பிரமுகர் ஒருவர் தொடர்பு இருக்கிறது என அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது முன்னாள் எம்எல்ஏ ஒருவர் விரைவில் சிக்குகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் முந்தைய ஆட்சியில் அரசியல் ப்ரெஷர் காரணமாக விசாரணையில் சிக்கவில்லை என சொல்லப்படுகிறது.