மகன்களுடன் சூப்பர் ஸ்டார் காலில் விழுந்து ஆசீர்!! 24 ஆண்டுக்கு பின் ஐஸ்வர்யாவின் பொங்கல்..
பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் உட்பட பல படங்களில் கமிட்டாகி 2025 வரை கால்ஷீட்டை மிஸியாக வைத்து வருகிறார்.
இந்நிலையில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.
இதன்பின் தனுஷ் படங்களில் பிஸியாக நடித்தும் ஐஸ்வர்யா தான் இயக்கும் படத்தின் வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் ஒர்க்கவுட், போட்டோஷூட் என்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
மகன்களுக்காக இந்த ஆண்டு சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்ப்பாத்திருந்த நிலையில் விவாகரத்தாகி ஒரு வருடம் ஆகியும் அமைதியாக இருந்து வருகிறார்கள்.
இப்படியிருக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா-விடம் சென்ற யாத்ரா, லிங்காவுடன் ஐஸ்வர்யா காலில் விழுந்து ஆசீர் பெற்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
24 ஆண்டுகள் கழித்து தனியாக மகன்கள் தன் அப்பா குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியதையும் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
Hope you and your loved ones had a memorable #pongal ??✨..may god bless everyone with only happiness, peace and prosperity in abundance ??? pic.twitter.com/aXM4fL7rHl
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) January 18, 2023