அரைகுறையுடன் கோடியில் சம்பாதிக்கும் மாடல்கள்!! அஷ்வனியை தொடர்ந்து தொகுப்பாளினி விஷ்ணு பிரியாவுக்கு ஆப்பு...
VJ விஷ்ணு பிரியா
தொகுப்பாளினி விஷ்ணு பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.
சமீபகாலமாக அவர் பதிவிடும் பதிவுகள் எல்லைமீறியதாகவும், சமூக ஒழுக்கத்திற்கு எதிரானவையாகவும் இருப்பதாக கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

குறிப்பாக விளம்பரங்களுக்காக அவர் பயன்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் இளம் தலைமுறையினரிடையே தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஹைதராபாத் சைபர் கிரைம் போலிசாரிடம் முறைப்படி புகாரளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பிரியா தன்னுடைய புகழை பயன்படுத்தி இதுபோன்ற அரை நிர்வாண பாணியில் விளம்பரங்களை செய்து சமூக வலைத்தளங்களின் விதிகளை மீறுவதோடு, பொது நாகரீகத்திற்கும் குந்தகம் விளைவிக்கிறார்.

டிஜிட்டல் தளங்களில் இதுபோன்ற உள்ளடக்கங்கள் எளிதாக அனைவரையும் சென்றடைவதால் இதுபோன்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது இணைய கணக்குகள் முடக்க வேண்டும் என்றும் கூறி புகாரளித்துள்ளனர்.
சமீபத்தில் கேரளாவை சேர்ந்த அஷ்வனி அஷ் என்ற இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.