லீக்கான ஜனநாயகன் படம்!! நஷ்ட ஈடு செய்ய விஜய் அடுத்த அதிரடி முடிவு..

Vijay Lokesh Kanagaraj Nelson Dilipkumar Atlee Kumar JanaNayagan
By Edward Apr 13, 2026 01:30 PM GMT
Report

லீக்கான ஜனநாயகன்

நடிகர் விஜய்யின் கடைசி படமாக கேவிஎன் பிரொடக்ஷன் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படம் உருவாகியது. அனிருத் இசையில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட டாப் கலைஞர்கள் நடித்துள்ள இப்படம் தணிக்கை சான்று பிரச்சனையால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தள்ளிப்போயுள்ளது.

லீக்கான ஜனநாயகன் படம்!! நஷ்ட ஈடு செய்ய விஜய் அடுத்த அதிரடி முடிவு.. | After Jananayagan Leaked Vijay Decided 1 More Film

ஜனநாயகன் படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் சில நாட்களுக்கு முன் லீக்காகி அதிர்ச்சி கொடுத்த சில மணிநேரத்தில் முழு ஜனநாயகன் படமும் இணையத்தில் சட்டவிரோதமாக லீக்கானது. இதனால் படக்குழுவினர் முதல் விஜய் ரசிகர்கள் வரை பலருக்கும் இச்செய்தி அதிர்ச்சியை கொடுத்தது.

இதனால் பலரும் யார் லீக் செய்தார்கள் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதனையடுத்து குறித்த நபர்கள் 7 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

லீக்கான ஜனநாயகன் படம்!! நஷ்ட ஈடு செய்ய விஜய் அடுத்த அதிரடி முடிவு.. | After Jananayagan Leaked Vijay Decided 1 More Film

Thalapathy70

இந்நிலையில், ஜனநாயகன் படம் லீக்கானதால் ஏற்பட்ட பெரிய நஷ்டத்தை ஈடு செய்ய, விஜய் ஒரு முடிவினை எடுத்துள்ளாராம். தயாரிப்பு நிறுவனத்திற்காக புதிய படத்தில் நடிக்க விஜய் தயாராகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தினை நெல்சன், அட்லீ அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் இதுதான் விஜய்யின் கடைசி படமாக (Thalapathy70) இருக்கும் என்று கூறப்படுகிறது.