லீக்கான ஜனநாயகன் படம்!! SK முதல் சிரஞ்சீவி, ரஜினி, கமல் வரை கொந்தளித்த சினிமா பிரபலங்கள்..
கேவிஎன் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ளது தான் ஜனநாயகன் படம்.

பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிய இப்படம் சில நாட்களுக்கு முன் படத்தின் குறிப்பிட்ட சில நிமிட காட்சிகள் சோசியல் மீடியாக்களில் லீக்கானது. அதன்பின் சில மணி நேரத்திலேயே முழு படமும் லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தணிக்கை குழுவில் இருக்கும் படம் எப்படி லீக்கானது என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் ஜனநாயகன் படம் லீக்கானதற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் கண்டனத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

- சிவகார்த்திகேயன் - தயவு செய்து சட்டவிரோதமாக படம் பார்ப்பதை தவிர்த்து, திரையரங்குகளில் மட்டுமே படத்தை பாருங்கள். இதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எச் வினோத் - ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவை சுமந்து நிற்கிறது, வெளியீட்டுக்கு முன் கசிவது உண்மையிலேயே வேதனையானது. தயவுசெய்து அதை பகிராமல் ஆதர்வளியுங்கள்.
- அர்ச்சனா கல்பாத்தி - திருட்டுத்தனமாக படங்களை பார்ப்பது என்பது கடைக்குள் புகுந்து பொருளுக்கு பணம் செலுத்தாமல் எடுத்து செல்வதற்கு சமம். திருடுத்தனமான உள்ளடக்கங்களை பகீராதீர்கள். படத்தை பிரமாண்டமான முதல்நாள் முதல் காட்சி கொண்டாட்டத்துடன் கொண்டாடுவோம்.
- விஷால் - இந்தப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று நம்புகீறேன், இது அந்தளவிற்கு சர்ச்சைக்குரிய படம் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் மதிப்புக்குரிய சென்சார் வாரியத்திற்கு என்று சில காரணங்கள் இருக்கலாம், உங்கள் படத்தை விரைவில் முறைப்படி காண ஆவலகவுள்ளோம், இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.

- விஜய் ஆண்டனி - ஜனநாயகன் படம் திருட்டுத்தனமாக இணையத்தொல் வெளியானது வருத்தமளிக்கிறது. இப்படம் ரிலீஸாகும்போது, அதிகாரப்பூர்வமான ஓடிடி தளங்களில் பார்த்து ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- ரத்ன குமார் - தமிழ் சினிமாவிற்கு இது ஒரு சோதனைக்காலம், இருண்ட சுரங்கத்தின் முடிவில் எப்போதும் ஒரு துளி உண்டு, மன உறுதியுடன் இருங்கள் படக்குழுவினரே.
- ஜிவி பிரகாஷ் - திருட்டுத்தனமாக படம் பார்ப்பதை ஆதரிக்காதீர்கள். கலைஞர்களின் திறமைக்கும் கடின உழைப்புக்கும் மதிப்புக்கொடுங்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு பின் பலரின் ரத்தமும், வியர்வையும் இருக்கிறது.
- குஷ்பூ - Piracy என்பது திட்டமிடப்பட்ட கொள்ளை. இதுவும் தண்டனைக்குரிய ஒன்றாக கருதப்பட வேண்டும். ஜனநாயகன் படத்தின் கசிவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையாகவே சினிமாவின் மீது மரியாதை இருந்தால், திருட்டுத்தனமாக படம் பார்ப்பதை தவிர்ப்பீர்கள்.
- ஜீவா - தயவுசெய்து இதுபோன்ற சட்டவிரோதப் பதிவுகளை பகிரவேண்டாம். இது பல வருட உழைப்பு, ரத்தத்தின் வெளிபாடு. அதற்கு துரோகம் செய்யாதீர்கள். இதற்கு காரணமானவர்கள் உடனடியாக அதற்கான விளைவுகளை சந்திக வேண்டும்.
- சாந்தனு - ஒருவரின் கனவு இணையத்தில் சிதறிக் கொண்டிருக்கிறது. அவர்களின் கடின உழைப்பை ஒரு சாதாரண பகிர்வு வீடியோவாக மாற்றிவிடாதீர்கள், திரைப்படம் திரையில் உயிர் பெறட்டும், உங்கள் கைபேசியில் இறந்திவிட வேண்டாம்.
- ஜெய் - நீங்கள் ஒரு திருட்டுப்படத்தை பார்க்கும்போது, வெறும் ஒரு படத்தை மட்டுமே திருடுவதில்லை, அதற்கு பின் இருக்கும் உழைப்பு, கனவு, லட்சியத்தை சேர்த்தே திருடுகிறீர்கள்.

- போஸ் வெங்கட் - சென்சாரில் இருக்கும் ஒரு படம் எப்படி வெளியில் வரமுடியும். ஒட்டு மொத்த திரையுலகமும் இதை கண்டிக்க வேண்டும். தவறு எங்கு நடந்தது என்பதை அறிந்து தக்க தண்டனை கொடுக்கவேண்டும். இதையும் தவெக அரசியலாக்க முயற்சி செய்யக்கூடாது.
- சிபிராஜ் - ஜனநாயகன் படத்தின் காட்சிகள் கசிந்திருப்பது மனவருத்தத்தை அளிக்கிறது. தயவுசெய்து யாரும் வீடியோக்களை பார்க்கவோ, பகிரவோ வேண்டாம்.
- சிரஞ்சீவி - ஜனநாயகன் படத்தின் கசிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு, பலரின் கூட்டுக் கனவுகளால் உருவானது. சினிமாவை மதிக்கவும் பாதுக்காக்கவும் நாம் அனைவரும் நமது ஆதரவை வழங்குவோம். Piracy-யை ஒழிப்போம், சினிமாவை காப்போம்.
- கலைப்புலி தானு - ஜனநாயகன் படம், அனைத்து கலைஞர்களின் உழைப்பிலும் தயாரிப்பாளரின் பெரும் முதலீட்டிலும் உருவான படத்தின் சில காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது கண்டு அதிர்ந்தேன். பரவுவது நிற்கட்டும் திரையரங்குகளில் மக்கள் கண்டு மகிழட்டும்.
இதனையடுத்து கமல், ரஜினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களின் கண்டனங்களை கூறி வருகிறார்கள்.
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) April 10, 2026
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over.
— Kamal Haasan (@ikamalhaasan) April 10, 2026
Piracy is…
The #JanaNayagan leak makes me angry.
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 11, 2026
I’ve experienced personally the pain and sense of loss when something like this happens, early in my career. You feel like a target, you feel a loss of hope, it’s not just about me, there are co-actors, directors, producers, and so many who…
Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!#JanaNayagan
— Suriya Sivakumar (@Suriya_offl) April 10, 2026

