ஒருவேளை கமலுக்கு பதில் பிக்பாஸ் 5ல் இந்த நடிகையா இருக்குமோ!! ஸ்ருதிஹாசன் கிடையாதா?

தமிழ் தொலைக்காட்சியில் டிஆர்பியில் மிகபெரிய இஅடத்ஹ்டினை தக்கவைத்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசனால் கடந்த 5 சீசனும் தொகுத்து வழங்கி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. 50 நாட்களை தாண்டி சென்றிருக்கும் நிலையில், கடந்த வாரம் கமல்ஹாசன் கதர் ஆடை பற்றிய விளம்பரத்திற்கு சிக்காக்கோ சென்றுள்ளார்.

திரும்பி வந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின் நேற்று இருமல் சலி காய்ச்சல் என அவதியுற்று வந்துள்ளார். பின் கோவிட் பாசிட்டிங் என்று தெரியவர தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் கோவிட் பாசிட்டிவ் என்று சமுகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதிர்ச்சியைந்த ரசிகர்கள் பிரபலங்கள் ஆறுதலாக பதிவிட்டு வந்தனர். இதனால் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியாத சூழலும் இந்தியன் 2, விக்ரம் போன்ற படப்பிடிப்பினை தள்ளி வைத்தும் உள்ளார்கள். இந்நிலையில் பிக்பாஸ் 5 சீசனை தொகுத்து வழங்கு கமலுக்கு பதில் யார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது. அவருக்கு பதில் அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கவுள்ளதாகவும் விஜய் சேதுபதி அல்லது சிம்புவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் விஜய் சேதிபதி சன் நிறுவனத்திடம் அக்ரிமெண்ட் போட்டுள்ளதால் அவர் வரமுடியாது என்றும் தெரிவித்து வருகிறார்கள். அப்படியிருக்கையில் பிக்பாஸ் 5யை தொகுத்து வழங்க நடிகை ரம்யா பாண்டியனை களமிரக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா வராதாதால் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதேபோல் தமிழ் பிக்பாஸை தொகுத்து வழங்க பிக்பாஸ் குழு ரம்யா பாண்டியனுக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் சூர்யாவின் பெயரும் பரீசிலனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்