வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா.. வாடகைத்தாயாக மாறிய சமந்தா
Nayanthara
Samantha
By Kathick
நயன்தாரா வாடகைத்தாய் சர்ச்சை
நயன்தாரா தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சில வாரங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். வாடகைத்தாய் மூலமாக தான் இந்த இரட்டை குழந்தைகளை நயன்தாரா பெற்றுக்கொண்டுள்ளார் என்று அதன்பின் தெரியவர, பல சர்ச்சைகளும் அதை சுற்றி எழுந்துள்ள. மேலும், அணைத்து சர்ச்சைகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வாடைகைத்தாயாக சமந்தா
இந்நிலையில், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது இப்படத்தில் சமந்தா ஒரு வாடகைத்தாயாக நடித்துள்ளார் என்று தெளிவாக தெரிகிறது.
நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட சர்ச்சை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து சமந்தாவின் யசோதா படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளதே என்று கூறி பலரும் இந்த விஷயத்தை சமூக வலைத்தளத்தில் பேசி வருகிறார்கள்.