விஜே பாருவை வெச்சு செய்த பிக்பாஸ் பிரபலங்கள், நடிகைகள்!! கொந்தளிக்கும் ரசிகர்கள்...
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டிக்கெட் டூ பினாலே டாக்ஸ் இந்த வாரம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த கார் டாஸ்க் தான் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது.

பாரு மற்றும் கம்ருதின் இருவரும் இணைந்து மிகவும் மோசமாக சாண்ட்ரா பற்றி பேசியது, அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை காரை விட்டு கடுமையான முறையில் வெளியில் தள்ளியது என மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
காரை விட்டு கீழே விழுந்த சாண்ட்ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் அவர் தற்போது நலமாக இருப்பதாக பிக் பாஸ் தெரிவித்தார்.

இதனையடுத்து காரில் இருக்கும் திவ்யா, பாருவை படுமோசமாக திட்டியிருக்கிறார். இந்நிலையில், பாருவின் இந்த செயலை பார்த்து, விஜய் சேதுபதி இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்துள்ளார்.
இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையில், முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள், நடிகைகள் என பலரும் தங்களின் கடுமையாக கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.



