கிட்டத்தட்ட ரூ 40 கோடிகளுக்கு மேல் நஷ்டம், கதறி அழும் அமலா மகன்
Amala
By Tony
80, 90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை அமலா. இவர் தெலுங்கின் முன்னணி நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார், இவர் இதுவரை 4,5 படங்கள் நடித்துவிட்டார். இதில் ஹிட் என்று பார்த்தால் ஒரு படம் தான்.
மற்ற அனைத்து படங்களும் பெரும் தோல்வியை தான் சந்தித்துள்ளது.
இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் ஏஜண்ட் என்ற படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரூ 100 கோடி வரை வசூல் செய்யும் என்று பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்தனர்.
ஆனால், படம் தற்போது வரை 12 கோடி கூட இன்னும் வசூல் செய்யவில்லை என்பது தான் வேதனை.
சுமார் ரூ 40 கோடிகளுக்கு மேல் இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், இதனால் அகில் மிகவும் மன வேதனையில் இருப்பதால தெரிய வந்துள்ளது.