நான்கு முறை பிரபல நடிகை வேண்டும் என்று அடம் பிடித்த ரஜினி.. ஐந்தாவது முறை ஒகே சொன்ன நடிகை

Rajinikanth Aishwarya Rai
By Kathick May 16, 2022 06:00 PM GMT
Report

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஆனால், இப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம்.

ஆம், முதலில் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் கேட்டார்களாம். அப்போது No சொல்லிவிட்டாராம். இதனை தொடர்ந்து வெளிவந்த பாபா, சந்திரமுகி, சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடிக்க ஐஸ்வர்யா ராய்யை கேட்டுள்ளார்களாம்.

அப்போதும் சில காரணங்களால் அவர் No சொல்லிவிட்டாராம். இதன்பின், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் படத்தில் தான், ரஜினியுடன் ஜோடியாக நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.