2025ல் ரசிகர்களை ஈர்த்த பெண் கதாபாத்திரங்கள் யார் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ..
பெண் கதாபாத்திரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் சினிமாத்துறையில் நடிக்கும் கலைஞர்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து பேசப்படும் பிரபலமாக மாறுவார்கள். அப்படி 2025ல் ரசிகர்களால் அதிகம் ஈர்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் லிஸ்ட்டை பார்ப்போம்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் படத்தில் நடிகை ரஜிஷா விஜயன், ராஜி ரோலில் நடித்திருப்பார். அழுத்தமான கதாபாத்திரத்தில் ரஜிஷா நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகையில் ஒருவர் தான் நடிகை ரோஷினி ஹரிபிரியன். மெட்ராஸ் மேட்டினி, தலைவன் தலைவி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
2025ல் சென்ஷேஷனல் நடிகையாக இருந்தவர் தான் நடிகை கயாடு லோஹர். டிராகன் படத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகையாக மாறினார் கயாடு லோஹர்.

வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள் படத்தில் ஹீரோயினுக்கு தோள்கொடுக்கும் தோழி செல்வி ரோலில் நடித்த சரண்யா ரவிச்சந்திரன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சரங் தியாகு, ஹர்சத் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆரோமலே படத்தில் அஞ்சலி ரோலில் நடித்த நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் இளைஞர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.