இதென்னடா உலக அழகிக்கு வந்த சோதனை.. ஐஸ்வர்யா ராய்க்கு பெரிய சிக்கல்
சில வருடங்களுக்கு முன் வந்து பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்திய விஷயம் பனாமா பேப்பர்ஸ். அந்த விஷயம் லீக் ஆகி அமிதாப் பச்சன் குடும்பம், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு இந்திய பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கினார்கள்.
அதன் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயை அமலாக்கதுறை (Enforcement Directorate) சம்மன் அனுப்பி இருக்கிறது. வெளிநாட்டில் அவருக்கு இருக்கும் சொத்து பற்றி விசாரணை நடத்த இந்த சம்மன் அனுப்பி இருக்கிறது.
இந்தியாவில் 300க்கும் அதிகமான பிரபலங்கள் பனாமா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. உலக அழகிக்கே இந்த சோதனையா என பேசி வருகிறார்கள்.
2004ல் இருந்து Liberalised Remittance Scheme (LRS) மூலமாக வரியை தவிர்க்க வெளிநாட்டில் அமிதாப் பச்சன் குடும்பம் மேற்கொண்ட முதலீடுகள் பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது என PTI தகவல் வெளியிட்டு இருக்கிறது.