திருமணம் நடக்கும் போது நடக்கட்டும்!! ஆனா அது மட்டும் முக்கியம்!! ஐஸ்வர்யா ராஜேஷ்..
பசங்க படத்தின் மூலம் தேசிய விருது நடிகையாக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தும் வந்தார்.
சமீபத்தில் அவர் சோலோவாக நடித்த படம் ஏதும் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்பதற்காக கிளாமர் ரூட்டுக்கு மாறினார். சமீபத்தில் தனது திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
திருமணம் பற்றி தான் யோசித்தது கூட இல்லை என்றும் கல்யாணம் நடக்கும் போது நடக்கும் அது நடக்க வேண்டும் என்று இருந்தால் நடக்கும் இல்லை என்றால் நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்யாணம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை படங்கள் தான் முக்கியம், வாய்ப்பினை பெறுவதுதான் என் கவனம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
சினிமா தான் என் உயிர், என் உயிரை நேசிக்கக்கூடிய தன்மை உள்ளவர் ஒருவர் சந்திக்கும் வரை என் திருமணம் பற்றி யோசனை கூட எனக்கு கிடையாது என்று தெளிவாக கூறியுள்ளார்.