திருமணம் பற்றி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. சொன்னதும் இப்படியா ஆகணும்
Aishwarya Rajesh
By Parthiban.A
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவருக்கு எப்போது திருமணம் என எங்கு போனலும் கேட்கிறார்கள். அந்த கேள்வியை அவர் பல விதங்களில் சமாளித்து வருகிறார்.
சமீபத்தில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் திருமணம் எப்போது என கேட்டனர்.
"நல்ல மாப்ள இருந்தா சொல்லுங்க" என ஐஸ்வர்யா ராஜேஷ் பதில் கூறினார். உடனே அங்கே கரண்ட் கட் ஆகி மொத்த இடமும் இருட்டாகி விட்டது.
அதை கெட்ட சகுனம் என நினைத்த ஐஸ்வர்யா ராஜேஷ், 'நல்ல பசங்க யாருமே இல்லையா' என தலையில் கை வைத்து புலம்பினார்.
