எப்போ தனுஷ் கூட சேரப்போரீங்க.. ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்தில் ரசிகர்கள் செய்த செயல்
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனுஷ் வெற்றியில் முக்கியப்பங்கினை வகித்து வந்தார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா தனுஷ்
அவரை வைத்து 3 என்ற படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாகவும் நெருக்கமாகவும் நடிக்க வைத்தார். அப்படி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்றெடுத்தனர்.
இரு மகன்களும் தற்போது வளர்ந்த நிலையில் 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விடுகிறோம் என்று அறிக்கை மூலம் தெரிவித்தனர்.
இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் வீட்டில் இரு குடும்பத்தினரும் சமூகமாக பேசி விவாகரத்தை ஒத்து வைப்பதாகவும் செய்யவேண்டாம் என்ற முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலானது.

ஐஸ்வர்யா மிரர்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தனுஷின் 150 கோடி மதிப்பில் போயஸ் கார்டனில் உருவாகியுள்ள புது வீட்டிற்குள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா மிரர், ஃபிளவர், மியூசிக், லவ்வர் இதெல்லாம் எப்போதும் நேர்மறை சக்தியை பிரதிபலிக்கிறது என்று பதிவிட்டு ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இதில் ரசிகர்கள் எப்போ தனுஷுடன் சேரப்போரீங்க, சீக்கிரம் நல்ல முடிவு சொல்லுங்க என்று பல கருத்துக்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.
ஒருவேலை தனுஷுடன் சேரும் அந்த நாட்களுக்காக காத்திருப்பதாக நினைத்து மறைமுகமாக ஐஸ்வர்யா கூறுகிறாரா என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
? mirror
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) October 15, 2022
Flower?
Music ? lover
Always reflecting positive power ⚡️#just #weekendvibes @apple pic.twitter.com/1D7SM2E5Yv