இனிமே தனுஷ் என் வாழ்க்கையில் இல்லை! மகன்களுக்காக சாதுரியம் செயல் பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 ஆண்டுகளில் இரு மகன்களுடன் கடந்த ஆண்டுவரை சந்தோஷமாக தான் வாழ்ந்ததாக கூறப்பட்டது.
கருத்து வேறுபாடு:-
இடையில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனை இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக அமைந்தது. கடந்த ஜனவரி மாதம் பிரபலம் ஒருவரின் பார்ட்டி முடித்து வீடு திரும்பியதும் இருவரும் விவாகரத்து பெற்றதாக அறிவித்தனர். தமிழ் திரையுலகமே இவர்களின் இந்த முடிவை எண்ணி அதிர்ச்சியாகினர். சூப்பர் ஸ்டார் உட்பட தனுஷ், ஐஸ்வர்யா வீட்டைச்சேர்ந்த பலர் அறிவுரை கூறியும் இருவரும் அந்த முடிவில் மாற்றமில்லாத படி இருந்தனர்.
விவாகரத்து உறுதி:-
விவாகரத்துக்கு இருவரிடமும் பல தவறுகள் இருப்பதாக செய்திகள் வலைத்தளத்தில் வைரலாகியும் வந்தது. சமீபத்தில் தனுஷின் மாறன் படத்தின் பதிவினை ஐஸ்வர்யா லைக் செய்தது கொஞ்சம் ஆறுதலாக இருக்க, ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடலுக்கு சூப்பர் தோழி என்று கலாய்க்கும் விதமாக தனுஷ் கருத்து தெரிவித்தது விவாகரத்தை உறுதி படுத்தியது.

இனி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான்:-
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது சமுகவலைத்தள கணக்குகளில் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்பதை மாற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று முற்றிலுமாக மாற்றியிருக்கிறார். இருவரும் தங்கள் பிள்ளைகளை பற்றி யோசிக்காமல் இப்படி நடந்து கொள்கிறார்களே இருவரும் தங்கள் பெற்றோர்கள் வேண்டாம் என்று கூறினார் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை திணித்து வருகிறார்கள்.
