ஒழுங்கா போய் வேலையை பாரு!! ரசிகர் செய்த் செயலால் மிரட்டி அனுப்பிய சூப்பர் ஸ்டார்..

Rajinikanth Viral Video
By Edward Feb 01, 2023 11:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை உலகளவில் வைத்துள்ளார்.

தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்கள் கூட்டணியில் இந்த வருட இறுதியில் படத்தினை வெளியிட திட்டமிட்டு அதற்கான ஷூட்டிங் வேலைகள் விறுவிறுவென சென்று கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை எப்போவது பார்க்க வருவார். ஆனால் கடந்த ஆண்டு தன்னுடைய் பிறந்த நாளுக்கு கூட ரசிகர்களை காண வராமல் ஏமாற்றினார்.

இதன்பின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் சமீபத்தில் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ஒரே ஒருவர் தான் என்று கத்தினார்கள். அதை பார்த்த ரஜினி, அந்த ரசிகரிடம் ஒழுங்கா போய் வேலையை பாருங்க என்று அன்போடு எச்சரித்து அனுப்பியுள்ளார். சிலர் இதை தகைக்கனம் என்று கூறி விமர்சித்தும் வருகிறார்கள்.