காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளான அஜித்!! 25 ஆண்டுகளாக காணாமல் போன நடிகை..
அஜித்
கோலிவுட் பக்கம் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வரும் விஷயம் அஜித் குமார் கார் ரேஸில் 3வது இடம் பிடித்தது பற்றிதான். இதுகுறித்தி அஜித்குமாருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதுஒரு பக்கம் இருக்க அஜித் குமார் காதல் குறித்த ஒரு விஷயம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் அஜித்தின் ஆரம்பகாலக் கட்டத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஹீரா மீது அளவுக் கடந்த காதலில் இருந்து வந்தார். அப்போது திருமண வரை சென்று பின் பிரேக்கப் செய்தார்.
மன அழுத்தத்தில்
இதனால் மன அழுத்தத்தில் சில காலம் சினிமாவில் கமிட்டாகுவதை நிறுத்திவிட்டார். ஹீராவை அஜித் காதலித்தது உண்மையா என்ற கேள்வி பதிலளித்திருக்கிறார். அந்தக்காலக்கட்டத்தில் இதயம் படத்தின் கதாநாயகி ஹீரா ராஜகோபாலை பல நடிகர்கள் காதலித்தார்கள்.
அதில் அஜித் குமாரும் ஒருவர் என்று சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். நடிகை ஹீரா கடைசியாக 1999ல் வெளியான சுயம்வரம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆள் அடையாளம் தெரியாமலே காணாமல் போய்விட்டார்.