விஜய்யை விட குறைவான சம்பளம் வாங்கும் அஜித்.. இத்தனை கோடி வித்யாசமா
Ajith Kumar
Vijay
Varisu
Thunivu
By Kathick
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. பல ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகிறது.
இதனாலேயே இரு திரைப்படங்கள் மீதும் அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வாரிசு படத்திற்காக விஜய்யும், துணிவு படத்திற்காக அஜித்தும் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாரிசு படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.
அதே போல், துணிவு படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 70 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. வாரிசு படத்திற்காக விஜய் வாங்கியுள்ள சம்பளத்தை விட ரூ. 50 கோடி குறைவாக துணிவு படத்தின் சம்பளமாக வாங்கியுள்ளார் அஜித்.