பாட்டு எழுத போன நேரத்துல கதைய சொல்லி ஓகே பன்னிருக்க! குஷியின் நயன் தாரா கணவர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வலிமை படம் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்று வந்த சமயத்தில் ஏகே61 படத்தின் புதிய லுக்கில் அஜித்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் அஜித் இப்படத்தினை மார்ச் இறுதிக்குள் பூஜை போட்டு படப்பிடிப்பையும் ஆரம்பிக்கவுள்ளாராம். இப்படம் கூடிய சீக்கிரமே ஷூட்டிங்கினை முடித்து இந்த வருடத்திற்குள் வெளியிட முடிவு செய்துள்ளார்களா. இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் அப்டேட் வந்த அடுத்த நாளே ஏகே 62 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியானது.
லைக்கா பிரடொக்ஷன் வெளியிட்ட இந்த அறிவிப்பில், ஏகே 62 படத்தினை தயாரிக்க போவதாகவும் அதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இசையை அனிருத் இசையமைத்து கொடுப்பார் என்றும் கூறியுள்ளன.
இந்த செய்தியை தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று எதிர்ப்பார்த்து வருவதாக இணையத்தில் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு வலிமை படத்தில் அம்மா பாட்டை எழுதும் சாக்கில் கதையை சொல்லி முடிச்சு ஓகே பன்னிருக்கான் இந்த விக்னேஷ் சிவன் என்று கலாய்த்து வருகிறார்கள்.
[
எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்❤️?
— Vignesh Shivan (@VigneshShivN) March 18, 2022
காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் ??
Thank U #AjithSir for this greatest opportunity to work with you for the prestigious #AK62
Words can’t explain the happiness ?
With my king @anirudhofficial again ? & @LycaProductions ☺️? pic.twitter.com/xFnT8jGSEf