அஜித் குமாரை மேடையில் தாக்கி பேசிய நடிகை மீனாவின் அம்மா - இப்படி ஒரு அவமானமா?
துணிவு
தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும் திருவிழா போன்று அவரின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கக்ளுக்கு வெளியாகும் நிலையில், நேற்று படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

அசிங்கப்பட்ட அஜித் குமார்
தற்போது முன்னணி நட்சத்திரமாக இருக்கும் இவர், ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். 1999 -ம் ஆண்டில் அஜித், மீனா, கார்த்திக் கூட்டணியில் வெளியானது ஆனந்த பூங்காற்றே திரைப்படம். அந்த காலகட்டத்தில் இப்படம் மக்களால் பெரிதும் கொண்டாட பட்டது.
மேலும் இப்படத்திற்காக அஜித்திற்கு சிறந்த நடிகர் என விருது வழங்க பட்டது. அந்த நேரத்தில் தொகுப்பாளர் மீனாவையும் , நடிகர் அஜித்தையும் மேடையில் நடனமாட சொன்னார்கள்.
அப்போது மீனாவின் தாய், " பல முன்னணி நடிகர்களோடு நடித்த மீனாவை எப்படி இவருடன் ஆட வைப்பது" என அஜித் குமாரை தாக்கி பேசினார் என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
