திடீரென கழுதை கதையை உருட்டிய அஜித்! சிறுத்தை சிவாவுக்காக இப்படியொரு கருத்தா?

Ajith Kumar Viral Photos
By Edward Jun 01, 2022 04:20 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்திற்கு பிறகு அதே கூட்டணியில் ஏகே61 படம் உருவாகி வருகிறது. படத்தின் வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவெடுத்திருப்பதால் படப்பிடிப்பு விறுவிறுவென சென்று கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகியும் வருகிறது. இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அஜித்தின் வாட்ஸ் அப் பதிவினை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கழுதையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பலர் பதவிதமாக கூறுவதை வைத்து ஒரு குட்டி ஸ்டோரியை கொடுத்துள்ளார். இது யாருக்கு அஜித் அவர்கள் கூறியிருக்கிறார் என்று பலர் யோசித்து யூகமாக கூறி வருகிறார்கள்.

நான் எது செய்தாலும் உலகம் முழுவதும் பேசிக் கொண்டே தான் இருக்கும். எல்லோரையும் நம்மால் திருப்தி படுத்த முடியாது என்ற கருத்தை அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் சுரேஷ் சந்திரா யாருக்காக? இப்படி ஒரு கருத்தைக் கூறினார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் படம் செய்கிறார்கள் என்கிற தகவல் வந்ததிலிருந்து அஜித் ரசிகர்கள் வேண்டாம் வேண்டாம் எனக் கூறி வருகின்றனர்.

ஒருவேளை அதற்காகத் தான் இப்படி ஒரு கருத்தை அஜித் பதிவிட்டு சுரேஷ் சந்திராவையும் இணையத்தில் பகிர சொல்லி இருக்கிறாரா என்று இணையத்தில் பல கருத்துகள் வெளியாகியுள்ளது.

GalleryGalleryGalleryGallery