ஒருவழியா இதையாச்சும் விட்டீங்களே!! படப்பிடிப்பில் நடிகர் அஜித் எடுத்த புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார், துணிவு படத்திற்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கதையில் நடிக்கவிருந்தது. ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவனை தூக்கிவிட்டு இயக்குனர் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த கூட்டணி ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்களான நிலையில் படப்பிடிப்பு ஸ்லோவாக சென்று வந்துள்ளது. விடாமுயற்சி என்ற டைட்டிலோடு அஜர்பைஜனுக்கு சென்று ஷூட்டிங்கையும் ஆரம்பித்தனர். இடையில் அஜித் ஒரு விசயமாக சென்னை திரும்பி இருந்தார். ஏற்கனவே படப்பிடிப்பு தாமதாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
திடீரென விடாமுயற்சி படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வெளியேறி இருக்கிறார். அஜித் சென்னை வர இதுதான் காரணம் என்றும் அவர் தான் ஒளிப்பதிவாளரை அதிரடியாக மாற்றி இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
அவருக்கு பதில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தான் தற்போது ஒளிப்பதிவு செய்து வருவதால் மீண்டும் படப்பிடிப்புக்கு அஜர்பைஜானுக்கு அஜித் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன், இயக்குனர் மகிழ்த்திருமேனி, நடிகை ரெஜினா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் போன்றவர்களை அஜித் புகைப்படங்களை எடுத்துள்ளார். அஜித் எடுத்த புகைப்படத்தை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடைசியில், ஒருவழியா இதையாச்சும் விட்டீங்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.
AK's Love For Photography#AjithKumarPhotography#MagizhThirumeni @trishtrashers @akarjunofficial@anirudhofficial @ReginaCassandra @Aravoffl #OmPrakash
— Suresh Chandra (@SureshChandraa) December 15, 2023
@ProRekha @DoneChannel1 @vidaamuyarchii
@gopiprasannaa @gkmtamilkumaran
@LycaProductions #Subaskaran pic.twitter.com/ifiy6dbZ4s
பெரும்பாலும் அஜித் குமார் தான் நடிக்கும் நட்சத்திரங்களை புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.