பிளேடு வைத்து அஜித் கையை கிழித்த ரசிகர்.. இப்படி ஒரு சம்பவம் நடந்ததா!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி மாபெரும் வெற்றிபெற்றது.
இதை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ள நிலையில், ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

நடிகர் அஜித் சமீபத்தில் பிரபல Youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியில், கரூர் துயர சம்பவம், கார் ரேஸ், AK 64 அப்டேட், குடும்பம் குறித்து பல விஷயங்கள் மனம் திறந்து பேசியிருந்தார். அதில், ரசிகர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசினார்.
அப்போது 2005ஆம் ஆண்டு தனக்கு நடந்த ஷாக்கிங் தகவல் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். "இது 2005ஆம் ஆண்டு நடந்தது. ரசிகர்கள் கூட்டத்தில் ஒருமுறை ஒருவருக்கு கைகொடுக்கும்போது பிளேடு வைத்து என் கையில் கிழிக்கப்பட்டது. காரில் ஏறிய பிறகுதான் எனக்கு கையில் ரத்தம் வருகிறது என தெரிந்தது" என கூறினார்.