தோனிக்கு ஐஸ் வைக்க ஒரு அளவு வேண்டாமா!! சிவகார்த்திகேயனை கலாய்த்த ப்ளூ சட்டை..

Sivakarthikeyan MS Dhoni Chennai Super Kings Blue Sattai Maran IPL 2026
By Edward Mar 24, 2026 08:30 AM GMT
Report

CSK - Roar 26

ஐபிஎல் 2026 சீசன் வரும் மார்ச் மாதம் 28ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது. அதற்காக 10 அணிகளும் தங்களின் அறிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சேப்பாக் ஸ்டேடியத்தில் Roar 26 நிகழ்ச்சியை நடந்தியுள்ளனர்.

தோனிக்கு ஐஸ் வைக்க ஒரு அளவு வேண்டாமா!! சிவகார்த்திகேயனை கலாய்த்த ப்ளூ சட்டை.. | Csk Roar26 Sivakarthikeyan Speech About Ms Dhoni

ஏ ஆர் ரஹ்மான் இசையில் அன்று முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு, அணி வீரர்களை புகழ்ந்து பேசினார். அப்போது, சிஎஸ்கே மற்றும் இந்திய ரசிகர்களால் புகழப்படும் தல தோனியிடம் சிவகார்த்திகேயன் ஒரு கேள்வியை கேட்டு அதிரவைத்தார்.

60 வயது வரை ஓய்வு பெறாமல் ஆடுங்கள் என்று தோனியிடம் கேட்டார். அதற்கு தோனி, தனது உடல் தகுதி குறைந்து கொண்டே வருவதால் அது மிகவும் கடினமானது என்றும் இருந்தாலும் தொடர்ந்து விளையாட முயல்கிறேன் என்றும் கூறியிருந்தார். இதனை பலரும் வரவேற்றாலும் சிலர் ஒரு நியாயம் வேண்டாமா என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

ப்ளூ சட்டை

அப்படி சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், 60 வயது, 80 வயது வரை ஓய்வு பெறாமல் இருக்க.. டூப் போட்டு மேட்ச்சில் ஆட வைக்க முடியாது. VFX, AI மூலம் உருவாக்க முடியாது. அடிக்கடி கேரவனில் ஓய்வெடுத்து ஆட வர முடியாது. இது விளையாட்டு. சினிமா இல்லை. ஜஸ் வைக்க ஒரு அளவு வேண்டாமா? என்று கலாய்த்துள்ளார்.