தயாரிப்பாளரின் வாயால் கோட்டை விடப்போகும் விஜய்!! ஊமையாக இருந்து ஸ்கோர் செய்யும் அஜித்

Ajith Kumar Vijay Gossip Today Varisu Thunivu
By Edward Dec 26, 2022 04:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இருதுருவ நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இருவரின் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படம் வரும் பொங்கலுக்கு போட்டிப்போடவுள்ளது. இதற்கான போட்டி பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்தே ஆரம்பித்து தற்போது பாடல்கள் வரை அதிரவைத்து வருகிறது.

வாரிசு படத்தில் கொடுக்கும் பிரமோஷன் கூட துணிவு படத்திற்கான பிரமோஷன் கம்மியாகத்தான் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று விஜய்யின் வாரிசு பட ஆடியோ லான்ச் இந்தியளவில் டிரெண்டாகி பேசப்பட்டது.

அதேசமயம் தயாரிப்பாளர் தில் ராஜு அஜித்தை தாழ்த்தி பேசப்பட்டதும் கடுமையான கண்டத்தை ஏற்படுத்திதோடு வெறுப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஜய் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் ஊமையாக அமைதியாக இருக்கும் அஜித் படத்திற்கான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரிக்கத்துவங்கியுள்ளது. பிரமோஷன் என்ற பெயரில் தில் ராஜு தேவையில்லாமல் வம்பை கையில் பிடித்து விஜய் பக்கம் திரும்பி இருக்கிறார்.

இதனால் நேற்று கூட ஆடியோ லான்சில் பெரியளவில் விஜய் குட்டி ஸ்டோரியை கூறவில்லை. பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் குட்டி ஸ்டோரி கேட்க வந்த ரசிகர்கள் இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.