நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன்னு மொக்கை வாங்கிய நடிகர்!! அஜித்திடம் சரணடைந்த சந்தானம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வாரிசு படத்துடன் மோதவுள்ளது.

இப்படத்திற்கு பின் அஜித், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் 62 வது படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ள விக்னேஷ் சிவன், நடிகர் நடிகைகளின் தேர்வில் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி காமெடி நடிகராக இருந்து அதைவிட்டுவிட்டு ஹீரோவாக அவதாரம் அறித்து நடித்து வரும் சந்தானத்தை அணுகி இருக்கிறாராம். பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் ஒருசில படங்கள் மட்டுமே வெற்றியை கண்டுள்ளார்.

பல இயக்குனர்கள் கூறியும் காமெடியனாக நடிக்க மறுத்து வந்த சந்தானம் சமீபத்தில் உதயநிதி ஸ்டார்லின் கூப்பிட்டால் நடிக்க காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சந்தானம் அஜித்தின் 62 வது படத்தில் நடிக்க விக்னேஷ் சிவனிடம் ஓகே கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக அஜித்தின் வீரம் படத்தில் வக்கீல் ரோலில் நடித்த சந்தானம் 9 வருடம் கழித்து காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் வில்லன் ரோலில் 29 வருடங்களுக்கு பின் நடிகர் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளாராம்.