விவாகரத்தாகி ஒரு வருடத்திற்கு பின் மருத்துவமனையில் சிகிச்சை.. நடிகை சமந்தாவுக்கு ஆறுதல் கூறிய மாஜி கணவரின் தம்பி..
நடிகை சமந்தா சில வாரங்களாக சமூக வலைதளத்தில் எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்யாமல் இருந்து வந்தார். அவருடைய முகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக தான் அவர் எந்த ஒரு புகைப்படத்தை பதிவிடுவதில்லை என்று தகவல் வெளியானது.
அதற்கு ஏற்றாற்போல் தன்னுடைய முகத்தை மறைத்து புகைப்படம் ஒன்று சமந்தா வெளியிட்டிருந்தார். myositis எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதற்கான சிகிச்சையில் இருக்கிறாராம்.

விரைவில் குணமடைந்து வலிமையுடன் வீடு திரும்புவதாக அதில் சமந்தா தெரிவித்திருக்கிறார்.
சமந்தாவுக்கு ஆறுதல் கூறி ரசிகர்களும் பிரபலங்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் தம்பி அகில் அக்கினேனி முதல் ஆளாக ஆறுதல் கூறி கருத்தினை வெளியிட்டுள்ளார். ஆல் தி லவ் அண்ட் ஸ்ரெந்த் டு யு டியர் சாம் என்று தெரிவித்துள்ளார்.