திரிஷா என் பொண்டாட்டி!! பொன்னியின் செல்வன் மன்னோடு மண்ணாகிவிடும்!! விஜய்க்கு சாபம் விட்ட Al சூர்யா..
பெரும்பாலானோர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள ஏதாவது ஒன்றினை கூறி அனைவரையும் தன் பக்கம் பார்க்க வைப்பார்கள். அப்படி நான் நடிகை திரிஷாவின் கணவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஏ எல் சூர்யா. இயக்குனர், இசையமைப்பாளர், ஆன்மீகவாதி என்று தன்னை பன்முகத்திறமையாளர் என்று கூறிக்கொண்டு சமீபகாலமாக பேட்டிக்கொடுத்து சர்ச்சையிலும் சிக்கி வருகிறார் சூர்யா.
சமீபத்தில் நடிகை திரிஷா தன்னை காதலித்ததாகவும், விக்ரம் எப்போது மரணமடைவார், விஜய்யை மிரட்டியவாறு தகாதவார்த்தையால் திட்ட ஆரம்பித்து லியோ மற்றும் பொன்னியின் செல்வன் வரை பலரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

திரிஷா விஜய்யின் லியோ படத்தில் நடிக்க ஆரம்பித்தது தனக்கு பிடிக்கவில்லை. யாருடனும் போட்டோ எடுக்க கூடாது என்று கூறினார். மேலும் திரிஷாவுக்கும் தனக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணமாகவுள்ளது என்றும் திரிஷாவுக்கு அரசியல் பிரகாசமாக இருப்பதால் அடுத்த முதலமைச்சர் ஆகலாம் என்று கூறியிருந்தார்.
மேலும், பொன்னியின் செல்வன் 2 ரிலீசாகாது, மாமன்னர் உத்தரவுக்கு பின் வெளியாகும் என்றும் மண்ணோடு மண்ணாகிவிடும் என்று வாய்க்கு வந்த படி பேசியிருக்கிறார். விஜய் தன் மார்க்கெட்டை இழப்பார், நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படும்.
தன்னை மாமன்னராக நினைத்து தன்னை மதிக்காதவர்களை தட்டித்தூக்கிவிடுவேன் என்று பல வாய்ஜால வார்த்தைகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அவரது இணையதள பக்கங்களில் திரிஷாவை கெட்ட வார்த்தைகளில் வர்ணித்து விஜய்யை கேவலமாக பேசியதை பார்த்து அவர்களின் ரசிகர்கள் ஏ எல் சூர்யாவை கடுமையாக தாக்கி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.