ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு மகளா நடித்த குட்டி நட்சத்திரம்!! யார் தெரியுமா?
ஜனநாயகன்
KVN தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் இன்று டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் நடந்து வருகிறது.
தற்போது ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் இசை நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், விஜய் ஸ்டேடியத்திற்குள் வந்துள்ளார். இந்நிலையில், ஜனநாயகன் படத்தில் 3வது சிங்கிள் பாடலான செல்ல மகளே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லிதன்யா
இதில், விஜய் கவனம் ஈர்த்த அளவிற்கு அவருடன் நடித்த லிதன்யா என்ற சிறுமி தான் மிகப்பெரியளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமான லிதன்யா, சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லமே செல்லமே, சுந்தரி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டிலும் கலந்து கொண்டிருகிறார் லிதன்யா. அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.