அய்யோ.. மாத வாடகை 10 லட்சம் ரூபாயா? வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் பிரபல நடிகர்

Amitabh Bachchan
By Parthiban.A Dec 14, 2021 08:30 AM GMT
Report

நடிகர் அமிதாப் பச்சன் எவ்வளவு பெரிய நடிகர் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்த வயதிலும் அவர் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என எப்போதும் பிஸியாக தான் இருந்து வருகிறார்.

அவர் குடும்பம் ஒருகாலத்தில் அதிகம் வறுமையையும் சந்தித்திருக்கிறதாம். குடும்ப கஷ்டம் காரணமாக தான் நான் காலேஜ் கூட படிக்கவில்லை என அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சன் ஒரு பேட்டியில் கூறி இருந்தது அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.

அப்படி இருந்த அமிதாப் பச்சன் தற்போது மும்பையில் பல இடங்களில் வீடுகள் மற்றும் பங்களாக்கள் வைத்திருக்கும் அளவுக்கு பணக்காரார் இருக்கிறார். இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சன் தனது ஒரு வீட்டை நடிகை க்ரித்தி சனோனுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்.

அந்த டூப்லெக்ஸ் வீட்டுக்கு ஒரு மாத வாடகை மட்டுமே 10 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.