வெச்சவர் எடுக்க மாட்டாரோ? பேனருக்கு திமுக காரனையே எதிர்த்த அமைச்சர்..

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன் ரோட்டின் ஓரத்தில் பேனர் வைத்ததில் அது விழுந்து பெண் இளம் பெண் மரணமடைந்தது பெரியளவில் செய்தி பரவியது. இதனால் பேனர்கள் வைக்க சட்டமுறையில் அனுமதி வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டது தமிழக அரசு.

இந்நிலையில், திருச்சியில் ஒரு மார்க்கெட் பகுதியில் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் பிறந்தாளை ஒட்டி பேனர்கள் வைக்கப்பட்டு பாராட்டியுள்ளனர். இதை கேள்விப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடனே அந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

பின் போலிஸார் தான் அதை அகற்றி இருந்தனர். இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வெச்சவன் வேற எடுத்தது போலிசா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்