’அன்புடன் குஷி’ சீரியல் நடிகை மான்சிக்கு திடீர் திருமணம்!! புகைப்படங்கள்..
அன்புடன் குஷி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் 2020ல் முக்கிய பங்கினை ஆற்றி வந்த சீரியல் தான் அன்புடன் குஷி.
சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த சீரியலில், குஷி என்ற ரோலில் நடித்து வருகிறார் மான்சி ஜோஷி.
கர்நாடகாவை சேர்ந்த மான்சி ஜோஷி, டிக் டாக் மூலம் பிரபலமாகி கன்னட மொழி சீரியல்களில் நடித்து வந்தார்.
மான்சி ஜோஷி
தமிழில் 2020ல் ஒளிப்பரப்பான 'அன்புடன் குஷி' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முடிந்துவிட்டது.
இதன்பின் மான்சி, மலையாள சீரியலான சந்திரகாந்தம் தொடரில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மான்சி ரோஷிக்கு ராகவா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நிச்சயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மான்சி ஜோஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.