சிம்புவுக்கு நோ, தனுஷுக்கு ஓகே சொன்ன பிரபலம்.. யார் தெரியுமா
Dhanush
Silambarasan
Anirudh Ravichander
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு. சமீபத்தில் தனது பிறந்தநாளில் தன்னுடைய மூன்று திரைப்படங்கள் குறித்து அறிவிப்பை சிம்பு வெளியிட்டு இருந்தார்.
இதில் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் கேட்டுள்ளனர். சிம்புவின் நெருங்கிய நண்பரான அனிருத் கண்டிப்பாக அப்படத்திற்கு இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனை மறுத்துவிட்டாராம் அனிருத். பல படங்கள் கைவசம் இருக்கும் காரணத்தினால் கால்ஷீட் இல்லை என சிம்பு படத்திற்கு நோ சொல்லிவிட்டாராம்.
ஆனால், அதே சமயம் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு இசையமைக்க ஓகே என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுக்கு மட்டும் நோ, தனுஷுக்கு மட்டுமே ஓகே-வா என சர்ச்சை எழுந்துள்ளது.