கேடுகெட்ட கேவலமான குப்ப படம், எச்.ராஜா படத்தை விளாசிய சாட்டை

Tamil Cinema Cinema News
By Tony Dec 22, 2025 11:30 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சாட்டை துரைமுருகன் எல்லோருக்கும் தெரிந்தவர்.

அவரின் நகைச்சுவையாக வீடியோக்களை பல லட்சம் பேர் விரும்பி பார்ப்பார்கள். அரசியல் நிகழ்வுகளையும், திரைப்பட விமர்சனங்களிலும் தனக்கே உரிய பாணியில் கலாய்த்து கலகலப்பாக பேசுவார்.

கேடுகெட்ட கேவலமான குப்ப படம், எச்.ராஜா படத்தை விளாசிய சாட்டை | Sattai Durai Murugan About H Raja Movie

இந்நிலையில் சாட்டை, சமீபத்தில் எச்.ராஜா நடித்துள்ள கந்தன் மலை படத்தை விமர்சனம் செய்துள்ளார், இதில், ஒரு மணி நேரம் கூட இந்த படத்தை பார்க்க முடியவில்லை, கேடுகெட்ட குப்பை படம் இது.

படம் முழுவதும் பிற்போக்கு தனங்கள் நிரம்பி வழிந்துள்ளது, சுயசாதி, மதம் பெருமை பேசி விஷம கருத்துக்களை பகிர்ந்துள்ளனர் என கடுமையாக சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.