விஜய் நல்லது பண்ணாரு..புகழ்ந்தது தப்பா!! அனிதா குப்புசாமி ஆதங்கம்

DMK Gossip Today Anitha Kuppusamy C Joseph Vijay Rajmohan Arumugam
By Jai Oct 11, 2026 10:15 AM GMT
Report

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு மக்களிசை பாடகர் புஷ்பவனம் குப்ப்புசாமி தமிழ்க வெற்றிக் கழகம் ஆசால் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யை, புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி உள்ளிட்ட பலரும் சந்தித்து, அவர் பற்றி பேட்டிகளில் பேசி வருகிறார்கள்.

விஜய் நல்லது பண்ணாரு..புகழ்ந்தது தப்பா!! அனிதா குப்புசாமி ஆதங்கம் | Anitha Kuppusamy Worried On Netizens Comments

அனிதா குப்புசாமி பேசுகையில், நான் அதிமுகவில் இருந்த நிலையில் என் கணவருக்கு இருந்த தகுதியை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவியை தருமாறு எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டேன்.

முதல் நாள் இரவு வரை நாளை அறிவிப்பு வரும் என்று சொல்லிவிட்டு மறுநாள் அப்படி இல்லை என்றபோது எப்படி இருக்கும். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் முடங்கி போய்விட்டார். என் கணவர் முனைவர் பட்டம் வாங்க 10 ஆண்டுகள் போராடினார். அவர் எடுத்த தலைப்பு சர்ச்சையானதால் முனைவர் பட்டம் கொடுக்கவே மறுத்தார்கள்.

நான் சிறுவயதில் 22 கிலோமீட்டர் நடந்து போய் படித்தேன். அப்போதெல்லாம் என்னை கிண்டல் செய்வார்கள், நான் பெரிய இடத்திற்கு வந்தாலும் விவசாயத்தை கைவிடவில்லை.

விஜய் நல்லது பண்ணாரு..புகழ்ந்தது தப்பா!! அனிதா குப்புசாமி ஆதங்கம் | Anitha Kuppusamy Worried On Netizens Comments

கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு ஒரு கச்சேரி கூட கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால்கூட ஏதோ சற்று ஆறுதலாக இருந்திருக்கும். கொடுக்கவில்லை என்று உண்மையை சொன்னாலும் கோபப்படுகிறார்கள்.

அங்கீகாரம்

எடப்பாடி பழனிசாமி, மு க, ஸ்டாலின் ஆட்சியில் ஒரு அங்கீகாரம் கூட கொடுக்கவில்லை. எங்களுக்கு எந்த காரணம் என்று கூட தெரியவில்லை. அறநிலையத்துறையில் இருந்த அதிகாரிகள் தான் இதன் பின்னணியிலிருந்தது தெரிந்தது. நாங்கள் தலைமையை எப்போதும் குறை சொல்லமாட்டோம்.

எங்களுக்கு கச்சேரி கொடுப்பதெல்லாம் கீழே இருக்கும் அதிகாரிகள் தான் என்றபோது அவர்கள் தான் இதற்கு பொறுப்பாவார்கள். தவெக அரசு என் கணவருக்கு இந்த பொறுப்பை கொடுத்தாலும் விஜய்யை புகழ்ந்தோம், உடனே எதிர்த்தரப்பினர் எங்களை தற்குறிகள் என்று கூறுகிறார்கள்.