இதுக்கு மேல வந்தா என்ன வரலனா என்ன! அண்ணாத்த HD பிரிண்ட் லீக்காம்..

சிவாஜி படத்திற்க்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் கதையளவில் எதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை என்று பல விமர்சகர்கள் கூறி வந்தனர். அதை தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த படம் இடம் பிடிக்கும் என்று எதிர்ப்பார்த்து இருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் படம் சீரியல் பாணியில் இருந்து கதை ஓரளவிற்கு குடும்ப கதைகளமாக உருவானதால் நல்ல விமர்சனம் பெற்றது. அப்படி இருந்து சில எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகியது.

தற்போது வரை தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் அண்ணாத்த படம் 200 கோடிகளுக்கும் மேல் வசூல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அப்படி இருந்து ஓடிடி தளங்களில் வெளியிட்டும் வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் எச் டி பிரிண்ட்டில் படம் இணையதளத்தில் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்