இதே வேலையா இருக்குதே.. கதைக்காக ரூம் போட்டு ஏமாற்றிய அஸ்வின்!
தொலைக்காட்சி பிரபலங்கள் தங்களுக்கு படவாய்ப்புகள் வருவதாக இருந்தால் அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொண்டு நல்ல பேர் வாங்க நினைப்பார்கள். ஆனால் சமீபத்தில் நடிகர் அஸ்வின் பேசிய பேச்சு அனைத்து சின்னத்திரை பிரபலங்களையும் பாதித்து வருகிறது. குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல வரவேற்பை பெற்ற அஸ்வின் ஆல்பம் பாடல்கள் படங்கள் என கமிட்டாகி நடித்து வந்தார்.
அவர் நடித்து வெளியாக இருக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் 40 இயக்குனர்களின் கதை கேட்டு தூங்கி இருக்கிறேன் என்று சர்ச்சையாக பேசியது பலரை கோபத்தில் ஆழ்த்தியது.
இதனால் பலர் கிண்டல் செய்து வந்தனர். அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோவையும் வெளியிட்டிருந்தார் அஸ்வின். இந்நிலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கி வைரலாகி வருகிறார் அஸ்வின். இயக்குனர் ஒருவர் முன்னணி தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு கதையை கூறி ஒப்புதல் வாங்கி நடிகர் தேர்வில் யோசித்து வந்துள்ளார்.
அஸ்வின் நியாபகத்திற்கு வர அவரை சந்தித்து பேசியுள்ளார். நட்சத்திர ஓட்டல் ஒன்றினை புக் செய்து வையுங்கள் என்றும் கதை அங்கு வந்து கேட்கிறேன் என்றும் கூறியிருக்கிறார் அஸ்வின். இயக்குனர் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி ரூம் புக் செய்து காத்திருந்துள்ளார்.
ஆனால் அஸ்வின் வரவில்லையாம். போன் போட்டு கேட்ட இயக்குனரிடம் இன்று எனக்கு கதை கேட்கும் மூடிலில்லை நாளை சந்திக்கலாம் என்று கூறிவிட்டாராம். இதனால் கடுப்பாகிய இயக்குனரும் தயாரிப்பு நிறுவனமும் அஸ்வினுக்கு பதிலாக கவினை புக் செய்துள்ளனர்.