ரகுமானை அசிங்கப்படுத்த குறுக்கு வழியை தேர்ந்தெடுத்த மதவாத கும்பல்
A R Rahman
By Tony
ரகுமான் இந்திய சினிமாவின் பெருமை என கூறலாம். உலகமே வியக்க 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி வந்தவர்.
இவர் சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடத்திய இசை கச்சேரி பெரு சர்ச்சை ஆனது. அதை தொடர்ந்து ரகுமான் மன்னிப்பு கேட்டார், பணத்தை திருப்பி தருவதாகவும் அறிவித்தார், நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு.
இந்நிலையில் சில மதவாத கும்பல் ரகுமான் மீது மத ரீதியான வார்த்தை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதை ஆரம்பத்திலே சுதாரித்த ரசிகர்கள் என்ன தான் இசை கச்சேரியால் நொந்தாலும், ரகுமானுக்கு ஒன்னு என்றதும், இது எங்கள் பிரச்சனை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கண்டித்தனர்.