இதுக்கு பேரு சிலுவையா? ஜோசப் விஜய்யை வேண்டுமென்றே வம்பிழுக்கும் கட்சி
விஜய் எந்த படம் எடுத்தாலும் அதை வம்பிழுப்பதற்கு என்றே சிலர் கிளம்பிவிடுவார்கள். அப்படி வரும் சர்ச்சைகள் படத்தின் ப்ரோமோஷனுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இந்நிலையில் தற்போது விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சில தினங்கள் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த பாடல் வீடியோவில் விஜய் சிலுவை அணிந்திருக்கிறார் என இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் தெரிவித்து, விஜய்யை 'ஜோசப் விஜய்' என குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவில் நங்கூரம் symbolஐ தான் சிலுவை என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இது தான் சிலுவையா? என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Joseph Vijay wearing Cross is a welcome sign, he is unapologetically and boldly displaying his religious identity - what's wrong in it.
— Indu Makkal Katchi (Offl) ?? (@Indumakalktchi) February 16, 2022
IMK welcomes this, every one has freedom of religion in India.
Unnecessary propaganda must be avoided. pic.twitter.com/xidZcU1zrT