என்னது பீஸ்ட் பாட்டே படத்தில் இல்லையா! இப்படி ஏமாத்திட்டியே நெல்சா..

vijay nelson anirudh beast arabickuthu halamithihabibo
By Edward Feb 22, 2022 08:40 PM GMT
Report

மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள படம் பீஸ்ட். படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் காதலர் தினத்தன்று வெளியாகி பல சாதனைகளை யூடியூப்பில் படைத்து வந்தது.

ஹலமிதி அபிபோ என்று ஆரம்பிக்கும் இப்பாடல் விஜய், பூஜா ஹெக்டே நடனத்தில் சிவகார்த்திகேயன் வரியில் அனிரூத் இசையில் உருவாகியது. இந்நிலையில் இப்பாடல் குறித்து புதிய செய்தி இணையத்தில் கசிந்துள்ளது.

பொதுவாக நெல்சன் படத்தில் கடைசியில் ஒரு பாடலை வைப்பது வழக்கம். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் கூட செல்லம்மா பாடலை கடைசியாக வைத்திருந்தார்.

அப்பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்திருந்தனர். தற்போது பீஸ்ட் பாடல் பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில், படத்தின் கிளைமேக்ஸில் தான் அப்பாடல் வரும் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதற்கு காரணம் படத்தின் திரைக்கதை தொய்வு ஏற்படும் காரணத்திற்காக காதல் பாடலான அரபிக் குத்து படத்தின் படத்தின் கடைசியில் வைத்துள்ளாராம் நெல்சன்.